"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விளக்கம் வந்த பின்பு விசாரணை துவங்கப்படும்"


கோவை, அக்டோபர் 30: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விளக்கம் வந்த பின்புதான் விசாரணை துவங்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 5-ம் தேதி அவர் காலமானார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக நீதி விசாரணை அல்லது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி நிருபர்களைச் சந்தித்த முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். விசாரணை ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து கடந்த செப்டம்பர் 25-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் அவருக்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணைய அலுவலகத்துக்கு கடந்த 27-ம் தேதி வந்த அவர் பணிகளைத் தொடங்கினார்.

இதனிடையே இன்று ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் இருந்து விசாரணை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கோவையில் ஒரு துக்கநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆறுமுகசாமி கோவை வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், "ஜெயலலிதாவின் மரணம் குறித்து 15 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் பெறப்பட்ட பின்னரே விசாரணை துவங்கப்படும். இரு நாட்களுக்குப் பிறகு சென்னை சென்ற பின்புதான் இதுகுறித்தான முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...